குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தை அமேசானுடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைக்க உள்ளது
Submitted by Anand on 21 January 2021 - 11:33pmமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தை அமேசானுடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைக்க உள்ளது
Posted On: 19 JAN 2021 6:35PM by PIB Chennai
அமேசான் வெப்சர்வீசஸ் உடன் இணைந்து குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நமது நாட்டில் அமைக்க உள்ளது. குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.